புதன், 30 ஜனவரி, 2013

அக்னி ஹோத்திரம்


“ஓம் பூர் புவஹ ஸ்வஹ
தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்”
(எந்தஒளி நம் அறியாமை என்னும் இருளைப்போக்கி நம் அறிவுச்சுடரை தூண்டுகிறதோ அந்த மேலான ஒளியை தியானிப்போமாக!)
இன்றைய உலகில் மனிதன் மனஅழுத்தத்தாலும் பல்வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகளால் துன்பப்படுகிறான். நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் மாசுபட்டுவிட்டது. மனிதன் விஷக்காற்றை சுவாசித்து நோய்களால் வாடுகிறான். காற்று அந்த அளவுக்கு மாசுபட்டுவிட்டது. இந்த மாசுக்களை நீக்கவும், நாம்இந்த பூமியில் பிறந்ததால் ஏற்பட்ட பிறவிக்கடனை தீர்க்கவும், பஞ்சபூதங்களுக்கும் முழுமையான பிரதி உபகாரம் செய்யவும் நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமைதான் அக்னிஹோத்திரம் எனும் எளிய வேள்வியாகும். இவ்வேள்வியின் போது எழும் புகையானது நோய்களைக் குணமாக்கி, மனதை செம்மைப்படுத்துகிறது. சுற்றுச்சூழலை முற்றிலும் தூய்மையாக்குகிறது. தாவரங்களைச் செழிப்பாக வளரச்செய்கிறது. நோய்களுக்கு அக்னிஹோத்திர சாம்பல் மருந்தாக பயன்படும். நீரில் இச்சாம்பலைக் கலந்தால் நீர் சுத்தமாகிவிடும். எனவே இந்த அற்புத வேள்வியை தினமும் செய்யவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகிறது.

செய்முறை – (தேவையான பொருட்கள்)

சரியான அளவில் செய்யப்பட்ட செப்பு பிரமிடுவடிவ பாத்திரம். (semi copper pyramid pot) பசு நெய் வைக்கக் கிண்ணம், நெய் ஊற்றும் கரண்டி, பாத்திரம் வைக்கும் ஸ்டாண்டு.

சுத்தமான பசுவறட்டி - பசுவறட்டி பசுமாட்டின் தனி சாணத்தில் இருந்து தயாரிக்கவேண்டும். வேறு எதுவும் சாணத்தில் கலக்கக்கூடாது.
பசுநெய் - பசுநெய் மிகவும் தூயதாக இருக்கவேண்டும்.
முழுப்பச்சரிசி - கல், குருணை நீக்கப்பட்டு முனைமுறியாமல் முழு அரிசியாக இருக்கவேண்டும். செந்நிறமுள்ள சிவப்பு அரிசி (brownrice) சிறந்தது.
அக்னிஹோத்ரா வேள்வி தினமும் காலை ஸுர்யஉதய, அஸ்தமன வேளையில் செய்யவேண்டும்.

எளியசெய்முறை விளக்கம்:


அக்னிஹோத்ர பாத்திரத்தில் முறையாகப் பசுஞ்சாண வறட்டியை அடுக்கி அக்னியை வளர்க்க வேண்டும். பின்பு சரியான ஸீர்ய உதய நேரம் வந்தவுடன் கீழக்கண்ட மந்திரத்தைக் கூறி நெய் கலந்த அரிசியை அக்னியில் இடவேண்டும்.

காலை ஸீர்ய உதய மந்திரம்:

ஸீர்யாய ஸ்வாஹா ஸீர்யாய இதம் நமம! (ஒருபாகம் நெய்கலந்த அரிசியை அக்னியில் போடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம!

மாலைஸீர்ய அஸ்தமன நேரத்தில்:

அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
ப்ரஜாபதயேஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம! (ஒரு ஸ்பூன் நெய்கலந்த அரிசியை அக்னியில் இடவும்)
அக்னி ஜ்வாலை தானாக அணைந்தவுடன் சிறிது நெய்யை அவிசுகளின் மீதுவிட்டு ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ கூறி வேள்வியை முடித்துவிடலாம்.

ம்ருத்யுஞ்சய மந்திரம்:

ஓம் த்ரயம்பஹம் யஜா மஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷிய மாம்ருதாத்!
(காலை, மாலை இரண்டுக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் பொதுவானது)
வேள்வியை செய்தவுடன் தியானம், மூச்சுப்பயிற்சி, பிராத்தனைகள் செய்யலாம். நம்முடைய வாழ்க்கை தேவைகள், காரியத்தடைகள் எல்லாவற்றையும் அக்னிமுன்பு சமர்ப்பணம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம் வாழ்வை வளப்படுத்தி ஆரோக்கியம், மனஅமைதி, மற்றும் காரியத்தில் வெற்றியும் பெறலாம். அக்னிபரிசுத்தத்தின் அடையாளம். உன்னதமான தூதுவன். எனவே எல்லாக்காரியங்களுக்கும் வெற்றி கிடைப்பது உறுதி.

வேள்வியை நிறைவுசெய்த பின்னர் பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே 3 மணிநேரம் வைத்துவிட வேண்டும். இதனால் தொடர்ந்து சூரியன், அண்டவெளியில் இருந்து காஸ்மிக் எனர்ஜி (cosmic energy) நிறைய கவர்ந்து இழுக்கப்படுகிறது. மிகச்சிறந்த ஆற்றல்தளம் அதைச்சுற்றிப் பரவுகிறது. வேள்விபாத்திரத்தைச் சுற்றி மற்றவர்களும், நோயாளிகளும் உட்கார்ந்து வேள்விப்புகையை நன்கு சுவாசிக்க நோய்கள் விரைந்து குணமாகும் நோய்எதிர்ப்புச்சக்தி அதிரிக்கும். சக்கரங்கள் தூண்டப்பட்டு மனஅமைதி உருவாகும்.
முனிவர்களும், ரிஷிகளும் தினந்தோறும் தங்கள் முதற்கடமையாக அக்னிவேள்வியை மேற்கொண்டனர். அக்னிஹோத்ரா வேள்வி சுற்றுப்புறத்தில் பெரும்மாற்றத்தை உருவாக்கி அமைதி நிலையை ஏற்படுத்துகிறது. பரிசுத்தமான சூழல் ஏற்படுகிறது. நம்முடைய உடலில் சக்கரங்களும், சுசும்பநாடி உட்பட எல்லா நாடிகளும் தூண்டப்படுகின்றன. இதன்மூலம் நாம் தெளிந்த சிந்தனையும், ஆழ்மனசக்தியையும் முழுமையாகப் பயன்படுத்தமுடியும். இத்தகைய அக்னிவேள்வி மூலமே முனிவர்களும், ரிஷிகளும் யோகம், தியானம், மந்திரங்கள் போன்றவற்றை ஞானதிருஷ்டி மூலம் உணர்ந்து உருவாக்கிவைத்தனர். தம்மைச்சுற்றியும், சுற்றுப்புறத்திலும் சக்திதளத்தை உருவாக்கினர். இதற்கு அக்னிவேள்வி தூண்டுகோலாகச் செயல்படுகிறது.  இன்று சாதாரண மனிதன் இதை தினந்தோறும் கடைபிடிப்பதன் மூலம் எல்லாவகையிலும் பயன்பெறமுடியும்! இன்றைய விஞ்ஞான யுகத்தில் மனிதனுக்கு பிரச்சனைகள், வாழ்க்கைத்தேவைகள், காரியத்தடைகள், துன்பமும், வறுமையும்  பெரும் சுமையாகிவருகிறது. இவற்றையெல்லாம் போக்கி அமைதியாகவும், எல்லாவளங்களும் பெற்று வாழ்வதற்கு ஒரே வழி அக்னிஹோத்ரா மட்டுமே! சிறந்த தீர்வாகும்.

வியாழன், 17 ஜனவரி, 2013

அதிர்ஷ்ட்டக் கற்களின் ரகசியங்கள்..

|
பிறப்பு ஜாத கத்தில் கிரகங்க ளின் நிலையை ஆரா ய்ந்து கோச்சாரம் நன்மை யைத் தருமென்பதை முடிவு செய்தல் அவசியம். உதாரண மாக, துலா ராசிக்கு, சனிப் பெயர்ச் சியின்போது ஏழரைச் சனியாக வந் துள்ளது. சனி பகவான் துலாத்தில்தான் உச்சம் பெறுகிறார். பொதுப்படையாக ஏழ ரைச் சனி கெடுபலன் என்று கூறுவதும் தவறு. உச்ச சனி அனைத்து துலா ராசிக்காரர்களுக்கும் அள்ளிக்கொடுக்கப் போகிறது என்பதும் தவறா னதே. அதற்காகப் பரிகாரங்களோ, பூஜைகளோ செய்யும்போது தனக்கு எவ்வாறு செய்வது என்று அறிந்து, புரிந்து அதன்படி செய்து நிச்சய பலன்  பெற வேண்டும்.

ஏழரைச் சனி என்ற உடனேயே நீலக்கல் அணிதல் கூடாது. முதலில் ஒரு ஜாதகரின் தசா புத்தியை ஆராய்ந்து, அந்தத் திசை நட்புத் திசையா, பகைத் திசையா என்றெல்லாம் பார்த்து, அந்தத் திசையின் அதிபதிக்கும், சனிபகவானுக் குமான நட்பை யோசித்தப் பிறகுதான் நீலக்கல் லைப் பரிந்துரை செய்யவேண்டும். நீலக்கல்லை கொடுக்கும் முன் அந்தக் கல் எவ்வளவு முற்றிய தன்மையினதாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து, எந்த பூமியில் விளைந்த இரத்தி னம் கொடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்து, ஜாதகரின் மற்ற நிலையை ஆரா ய்ந்தும் கொடுக்கும் போதுதான் ஜாத கர் பலன் பெற முடியும். இவ்வாறு தான் அனைத்துக் கிரகங்களின் கோச்சார நிலையில் இரத்தினம் கொடுக்கவேண்டும். பலருக்கு வாழ்நாள் முழுக்கக் கொடுக் கும் இரத்தினமே கோச்சாரத் திற்குப் பொருந்தும். சில ருக்கு கோச்சாரத்தில் தனி இரத்தினமே தேவைப் படும். அதனால் தான் பொதுப்படையாகக் கொடுக்காமல் அவரவர் ஜாதகத்தைத் துல்லியமாக ஆராய்ந்த பிறகே இரத்தினத் தைப் பரிந்துரை செய்ய வேண்டும்.

குருபகவானின் பெயர்ச்சி, ராகு-கேது எனும் சாயா கிரகங்களின் பெயர்ச்சி, சனி பகவானின் பெயர்ச்சியை மன தில் கொண்டு, முக்கியத்துவம் கொடுத்து, தனக்கு வரவிருக்கும் நன்மை, தீமையை ஆராய்ந்து, தீய பலன் எனில் தக்க சாந்திகளைச் செய்து, ஸ்லோகம் உச்சரித்து, கோயில்களுக்குச் சென்று, அந்நிலையிலான உணவுப் பழக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கான இரத்தினங்களை அணிந்து கொள்வ தனால் சிரமங்கள் வந்தபோதும் சூரியனைக் கண்ட பனிபோல் கெடுபலன் கரைந்துவிடும்.

அந்தக் கிரகங்கள் கொடுக்கும் கெடுபலனைத் தடுக்கவல்ல கிரகமும் குறைக்க வல்லவரும் குரு பகவான்தான்.

கெடுபலனைக் குறைக்கும் சக்தியும் குருபகவானுக்கு மட் டும்தான் உண்டு. ஜாதக ரீதியாக குருவின் பார்வை இருக்குமாயின், வாழ்க்கை எனும் படகு அழகாக நகர்ந்து செல்லும். அதனால்தான் `குரு பார்க்கக் கோடி நன்மை' என்பர். இவ்வளவு அழகான ராஜகுரு ஒருவரின் ஜாதகத்தில் சிறந்த பலன் கொடுக்கும் 2, 5, 7, 9, 11 ஆகிய இடங் களில் வீற்றிருக்கப் பெற்றவர்களாயின் கொடுத்து வைத்தவர்கள் எனும் அட்டவணை யின் கீழ் அடங்குவர்.
http://www.silverjewelrywholesales.com/wp-content/uploads/2010/04/Cubic_Zirconia_Gems_Stones.jpg
இவ்வாறு பார்க்கும் பொழுது, இராசியை மட் டும் பார்க்காமல் பிறப்பு லக்கினத்தையும் கணக்கில் கொண்டு பிறகே முடிவு எடுத்தல் அவசியம். லக் கினமோ, இராசியோ - ஏதாவது ஒன்றுக்கு குரு பார்வை கிடைத்தாலே சராசரி மனித வாழ்க் கையைவிட நல்லதொரு வாழ்க்கை நிலையை அடையலாம்.

பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???

 
 
 
பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்கு தெரியுமா ???
கேள்வி :
 
1 பரிகாரம் என்ற முறையில் சாமி சிலை அல்லது நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை பண்ணலாமா ?? பின் சிலையை கோயிலில் சென்று வைக்கலாமா 
 அதன் சாதக பாதக முறை விளக்கவும்...
 
2  ஒரு குடும்ப வாழ்கையில் உள்ள ஒருவன்... ஒருவன் அடிக்கடி கோயில் கோயிலாக செல்லலாமா 
நண்பர் ஒருவர் மாதத்தில் 30 நாட்களில் 
ஒரு பௌர்ணமி 
ஒரு அம்மாவாசை 
இரண்டு பிரதோஷம்
நான்கு செவ்வாய் 
நான்கு வெள்ளி 
சதுர்த்தி 
ஒரு தேய் பிறை பூஜை 

இப்படி செல்லும் ஆட்கள் இருகின்றநேர்.. இவர்கள் கல்யாணத்திற்கு பிறகு கோயில் செல்வார.. பிசினஸ் கவனிப்பார ???
 
 
பதில் :
 

 
நண்பரே கணக்கு சூத்திரமே சரியாக தெரியாத என்னிடம் ,  பிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் பற்றி கேள்விகேட்டால், நான் என்ன செய்ய முடியும் ? ( இறைநிலையே என்னை காப்பாற்று ) மேலும் இதைப்பற்றி   சம்சார வாழ்வில் உள்ளவர் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது . 
 
இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்தது எதற்கு என்றே தெரியாத  சிலர் இதுமாதிரி பல முயற்ச்சிகளை செய்துகொண்டு தானும் கெட்டு , தன்னை சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துகொண்டுதான் உள்ளனர்  இந்த பூமியில். 
 
 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற மூத்தோர் வாக்கின் படி மனிதனாக பிறந்த இந்த பிறப்பே மிகவும் சிறப்பு  வாய்ந்தது , இந்த மனித வாழ்க்கையினை சிறப்பாக வாழ ஒவ்வொருவரும் அறிவின் வழியில் செயல்படுவது இந்த மனித வாழ்க்கையினை மேலும் சிறப்படைய  செய்யும் .
 
மேலும் இறைநிலையின் தத்துவத்தை உணராத அனைவரும் இந்தமாதிரி   மன நலம் கெட்டு பிதற்றிகொண்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்பதே உண்மை . மேலும் இறைநிலை ஒவ்வொரு இடத்திலும் ,  ஒவ்வொரு ஜீவன்களிலும், எல்லா நிலைகளிலும் , எல்லா இடத்திலும் , உயிர் உள்ள , உயிர் அற்ற ஜீவன்கள் , பொருட்டகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து உள்ளார் , இதை உணர்ந்தவர்கள் இறைநிலை வேறு தான் வேறு என்ற எண்ணம் வர வாய்ப்பு இல்லை .
 
 மேலும் தான்னையே  சுவாமி , கடவுள் ,  அவதார புருஷன் , ஆத்த , ஒம்  சக்தி, பரமானந்தம் ,  அப்பா பகவான் , மற்றும் சுரைக்காய் கடவுள் , பாம்பாட்டி பைரவன் , சுங்குடி சுவாமி , என்று தன்னையும் ஏமாற்றி கொண்டு தன்னிடம் வருபவர்களையும் ஏமாற்றி கொண்டு இறுதியில் தீராத மான நோயால் பாதிக்கப்பட்டு கர்ம வினை பதிவை நீக்கி கொள்ள இயலாமல்  இறந்து போகின்றவர்களே அதிகம் .
 
 
எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு  .
 
 
கடவுள் என்பதின் அர்த்தம் தெரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விழிப்புணர்வு இல்லாமல் மூட நம்பிக்கையில் மூழ்கி திளைத்துகொண்டுதான் உள்ளனர்,   இந்த கலி யுகத்தில் .
கடவுள் பிரித்து பார்த்தாலே இதன் உண்மை தெரிந்து விடும் 
( கட+உள் ) உன்னில் இருக்கும் இறைநிலையை உள்நோக்கி பார்த்தாலே இறைநிலையின் ( கடவுள் ) தன்மை தெரிந்து விடும் .
இது எல்லோரிடத்திலும் உள்ள இறை சக்தி ( குண்டலினி ) இதை உணர சுய அறிவில் விழிப்புணர்வும் , சிறந்த  ஆன்மீக குருவின் வழிகாட்டுதலும் நிச்சயம் வேண்டும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் அனைவரும் பெரும் பாக்கியம் செய்தவர்களே .

நவகிரகங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு தங்களின் அலை கதிர்கள் மூலம் நல  வாழ்வினை தரும் அமைப்பை பெற்றவை , இதை ஒரு சிறு எடுத்துகாட்டு மூலம் விளக்கலாம் :
 
நமக்கு எதிரில் ஒரு சுவர் இருப்பதாக வைத்துகொள்வோம் அதை கிரகமாக பாவித்துகொள்க , அந்த சுவரில் இருக்கும் சுண்ணாம்பு கிரக சக்தியாக பாவித்து கொள்க . நாம் அந்த சுவரை  நாம் தொடாமல்  ( கிரகம் ) நமது  கைகளில் சுண்ணாம்பு ( கிரக சக்தி ) வாருவது எப்படி சாத்திய படும் ?

ஒரு பந்தை கொண்டு சுவற்றில் எறிந்தால் அந்த பந்து சுவற்றில்  பட்டு நமது கைக்கு வரும் அந்த பந்தில் பட்ட சுவற்று சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமது  கைகளில் படும் இந்த முறையில் தொடர்ந்து செய்யும் பொழுது சுண்ணாம்பு ( கிரக சக்தி ) நமக்கு தேவையான அளவிற்கு நமது கைகளில் கிடைத்து விடும் . சரி அந்த பந்து எதுவென்று குழம்ப வேண்டாம் அது உங்களின் எண்ண ஆற்றலே ஆகும் , இது சுலபமாகவும் எளிமையாகவும் ஒவ்வொரு மனிதரும் நவகிரகங்கள் அமைப்பில் இருந்துவரும் சக்தியினை யாருடைய உதவியும் இன்றி பெற்றுகொள்ள இயலும் ஒரு எளிமையான வழிமுறை . 

கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக வீட்டில் வைத்து வழிபடுவதால் எவ்வித நன்மையையும் கிடைக்க வாய்ப்பு எனக்கு தெரிந்து இல்லை என்பதே உண்மை , மேலும் இதை செய்துவருபவர்களிடம்  கேட்டால் ஒருவேளை பதில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே !
 
 ஆகம விதிகளின் படி கடவுள் சிலை , மற்றும் நவகிரகங்களை சிலையாக  உயிர்களை ( உயிர்கலப்பு ) செய்து கோவில்களில் வழிபடுவதே சால சிறந்ததாக இருக்கும் என்பது எனது கருத்து . 
 
ஒரு வேலை சம்பந்தபட்டவர் நாக சிலையை வீட்டில் வைத்து ஒரு மண்டலம் பூஜை செய்வதைக்காட்டிலும் , ( காட்டில் இருக்கும் இரண்டு நாக பாம்புகளை கொண்டுவந்து வீட்டில் வைத்து பூசை புனஷ்காரம் செய்தால் விரைவில் பலன் தெரியும். சம்பந்த பட்டவர் பூசை போட்டால் பரவாஇல்லை , ஒருவேளை  இரண்டு நாக பாம்புகளும் சம்பந்த பட்டவரை போட்டு விட்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது ) சாதகர் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால், தனது  தாய் வழி பெற்றோரையும்  , தனது  தந்தை வழி பெற்றோரையும் பேணி காப்பாற்றினால் நிச்சயம் சாதகர் ராகு கேதுவால் அதிக நன்மைகளை பெற முடியும் . 

மனிதர்களை இறைநிலை படைக்கும் பொழுதே ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையை செய்து மனிதகுலம் மேம்பட அறிவினையும் கொடுத்துள்ளார் , ஒரு விவசாயி விவசாய விளை பொருட்களை விதைக்காமல் , தானியம் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை, அவர் கடவுள் சிலையை வைத்துகொண்டு மாதம் முழுவதும் கடவுளை வழிபட்டுக்கொண்டு இருந்தால், மற்றவர்கள் உன்ன உணவிற்கு எங்கு செல்வது , அது போல் ஒவ்வொருவரும் தமது கடமைகளில் சரியாக செய்வதின் மூலம் கடவுளை காண இயலும் .
 
 ஒரு நாட்டின் அரசன் தனது ஆட்சியை செம்மையாக நடத்துவதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு மந்திரி அரசனுக்கு நல்ல ஆலோசனை சொல்வதின் மூலம் இறைநிலையை காணலாம் , ஒரு தளபதி மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பார்ருவதின் மூலம் இறைநிலையை   காணலாம் , மக்கள் தமது கடமை சரிவர செய்வதின் மூலம் இறைநிலையை காணலாம்.
 
தமது கடமையே கடவுள் என் செய்து வருபவர்களுக்கு, கடவுள்  அவர்களுக்கு  தொண்டனாக மாறி தனது கடமையை செவ்வனே செய்வார் என்பது அனுபவ உண்மை .
 
மனிதனால் இறைநிலைக்கு எதுவும் கொடுக்க இயலாது , இறைநிலையால் மட்டுமே மானிதனுக்கு அனைத்தும் கொடுக்க இயலும் என்பதை நன்கு உணர்ந்து செயல் படுவது நலம் தரும் .
 
இறைநிலையின் கருணையை உணர்ந்து , நமது பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்வதும் , தமது இல்லத்து அரசிக்கு செய்ய வேண்டிய கடைமைகளை செவ்வனே செய்வதும் , தமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பதும் . தம்மால் சமுதாயத்திற்கு இயன்ற அளவு நன்மை செய்வதும் ஒரு ஆண்மகனின் முக்கிய  கடைமையாகும்  .
 
வாழ்க்கையினை வாழ்ந்து பாருங்கள் நண்பரே !

புதன், 16 ஜனவரி, 2013

அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ, எங்கெல்லாம் ராமனின்வரலாறு பேசப்படுகிறதோ அங்கெல்லாம் ஆனந்தக் கண்ணீருடன் அனுமன் மெய்சிலிர்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் என்பது ஐதீகம்.

அதனால், ராமாயணத்தைப் பாராயணம் செய்பவர்கள் அனுமனுக்கு தனியாக ஒரு மணையை (பலகை) போடுவர். கண்ணுக்கு புலனாகாமல் சூட்சும உடலுடன் அனுமன் அந்த மணையில் அமர்ந்து ராமநாமத்தைக் கேட்பார். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவது போல காலங்காலமாகவே வரும் ஒரு பழக்கம். அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.

பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு. அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் `ஜிவுஜிவு' என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது.

மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ப அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர்.

வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த போட்டியில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது ஐதீகம். அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்

ஸ்தோத்திரத்தை

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சூரிய பகவான்

சீரருள் மிகச் சுரந்து செகத்துயிர் அனைத்துங் காக்கப்
பேரருள் பிதாவு மாகிப் பெருந்துன்ப இருளை யோட்டிக்
காரருள் சுகத்தை நல்கக் கதிர்களா யிரம்ப ரப்பும்
பாரருள் பிரிதிப் புத்தேள் பதமலர் சென்னி வைப்பாம்.

திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சந்திர பகவான்

செழித்திடச் செல்வம் நல்கிச் செகத்துள் உயிர்கட் கெல்லாம்
வழித்திடும் பிதாவு மாகி வல்லிருள் தன்ன யோட்டித்
தழைத்திட அமுதமாகத் தக்கதோர் கதிர் பரப்பிப்
பொழிந்திடுஞ் சோமநாதன் பொற்பதம் தலைக்கொள்வோமே.

செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

அங்காரக பகவான்

வெற்றியும் வீரம் ஆண்மை விதரணம் பராக்கிர மங்கள
சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப்
பற்றிய பூமி யின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி
எற்றிசைப் புகழும் சேயின் இருபதம் தலைக்கொள்வோமே.

புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

புத பகவான்

இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி யுக்தி
வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம்
துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும்
கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.

வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

வியாழ பகவான்

பெருநிறை செல்வம் மேன்னை பெற்றிடுஞ் சுகங்கல்யாணம்
வருநிறை மரபு நீடி வாய்க்குஞ் சந்ததி தழைக்கத்
தருநிறை ஆடை ரத்னந்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல்! தலைக்கொள்வோமே.

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சுக்கிர பகவான்

திரைகடல் சூழம் பூமி சேர்த்திடும் உயிர்கட் கெல்லாம்
நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம்
தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும்
மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக்கொள்வோமே.

சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சனி பகவான்

கோரிய உலகத்தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம்
மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச்
சீறிய துன்பந்தீர்ந்து சிறக்கத் தீர்க்காயுள் நல்கும்
காரியின் கமல பாதக் கடிமலர் தலைக்கொள்வோமே.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

ராகு பகவான்

பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோக போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கேது பகவான்

மாதுமை பாகன் சொற்ற வரத்தினால் அமுத பானக்
கேதுவும் உடையனாகி எவ்வுயிர்களுந் தழைக்கக்
கோதிலா ஞானம் மோட்சம் குருபக்தி அருளும் நல்கும்
கேதுவாம் பகவன் பாதம் கிளர்முடி மிசைக்கொள்வோமே.

கந்த சஷ்டி கவசம்


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

சக்தி வழிபாடு





சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.


சக்தி என்றும் கருனை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். [அவர் என்றென்றும் என் துணையிருப்பார்.]

இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார். [எ-று]

ஜோதிடம் பயில்பவரும், சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும். அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி விளக்குகிறார்.